Monday 30 May 2011

tamil short story


தேனீக்கள் மலருக்கு மலர் சென்று தேன் சேகரிப்பதை சில ஈக்கள் பார்த்தன. எதற்கு இத்தனை கஷ்டம். ஒரு வீட்டில் அலமாரியில் தேன் பாட்டில் வைத்திருக்கிறார்கள். அது சரியும் நிலையில் உள்ளது. காத்திருந்து சரிந்ததும் மாற்றி மாற்றிக் குடிக்கலாம் என்று காத்திருந்தன.

அவைகள் எதிர்பார்த்தபடியே தேன் பாட்டில் சரிந்து தரையெல்லாம் தேன். ஈக்கள் உற்சாகத்துடன் மொய்த்துத் தேனைத் தத்தம் சின்ன நாக்குகளால் நக்கின. திருப்தியாகத் தேன் குடித்ததும் பறந்து போக முயற்சித்த போது இறக்கையெல்லாம் தேன் ஒட்டிக்கொண்டு நகர முடியாமல் தேனிலேயே சாவு! அதற்குமுன் ‘அற்ப சந்தோஷத்துக்காக நம்மை நாமே அடித்துக்கொண்டு விட்டோமே’ என்று அங்கலாய்த்தது விட்டித்தான் செத்தன.

No comments:

Post a Comment